இந்தியா

கரோனா வைரஸ் கண்டு உலகமே விழி பிதுங்கும் நிலையில் ‘பசுவின் சிறுநீர்’ பலன் அளிக்கும் என்ற பாஜக எம்.எல்.ஏ.

பிடிஐ

சீனா போன்ற மருத்துவ அறிவியலில் பல சாதனைகளைப் புரிந்த நாடே கரோனா என்ற புதிர் வைரஸை அடக்கப் போராடி வரும் நிலையில் பசுவின் சிறுநீர் அதற்கு சிறந்த சிகிச்சை என்று அசாம் பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிப்பிரியா அசாம் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

இவரது பேச்சைக் கேட்ட மற்ற பாஜக உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

“நம் அனைவருக்கும் தெரியும் பசுவின் சாணம் புற்று நோயைக் குணப்படுத்துவது என்பது. பசுவின் சிறுநீரைத் தெளித்தால் அந்த இடமே சுத்தமாகி விடுகிறது. அதே போல் பசுவின் சிறுநீர், பசுவின் சாணம் கொண்டு கரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

பங்களாதேஷ் நாடுதான் உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 2ம் இடம் வகிக்கிறது, இந்தியாவிலிருந்து கடத்தப்படும் பசுக்களால் அந்த நாட்டின் பொருளாதாரமே வலுவடைந்து வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சி பசுக்களைக் கடத்துவதை நிறுத்த ஒன்றும் செய்யவில்லை.

இப்போதெல்லாம் பசுக்களை கடத்த நதிகளைப் பயன்படுத்துகின்றனர். சட்ட விரோத வர்த்தகங்கள் நடைபெறுகின்றன” என்றார் பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிப்பிரியா.

SCROLL FOR NEXT