இந்தியா

டெல்லி கலவரம்: தேர்தல் தோல்வியால் மக்களை பிளவுபடுத்தும் பாஜக: சரத்பவார் விமர்சனம்

செய்திப்பிரிவு

டெல்லி தேர்தலில் தோல்வியடைந்த பாஜக மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிறது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். டெல்லி கலவரம் தொடர்பாக மத்திய அரசையும், பாஜகவையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இதுகுறித்து கூறியதாவது:
‘‘தலைநகரான டெல்லி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்து விட்டது. அதன் பிறகு ஆளும் கட்சி சமூகத்தை பிரி்த்தாளவும், மதரீதியாக மக்களை பிளவுபடுத்தவும் முனைந்தது. கடந்த சில நாட்களாக டெல்லியில் கலவரம் நடக்கிறது’’ எனக சரத்பவார் கூறினார்.

SCROLL FOR NEXT