இந்தியா

என்.ஆர்.சி., என்.பி.ஆர் விவகாரத்தில் பிஹார் வழியைக் கடைபிடிக்க மகாராஷ்டிரா முடிவு

செய்திப்பிரிவு

மகாராஷ்ட்ரா மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் ஆகாதி அரசும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகைப் பதிவேடு விவகாரத்தில் பிஹாரைப் போல் செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

நிதிஷ் குமார் தலைமை பாஜக கூட்டணி அரசு பிஹாரில் என்.ஆர்.சி.யை அமல் படுத்தப் போவதில்லை என்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் 2010ம் ஆண்டு வடிவத்தை மாற்றாமல் நடைமுறைப்படுத்துவதாகவும் தீர்மானம் நிறைவேற்றியது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்கெனவே என்.ஆர்.சி.யை அமல்படுத்த மாட்டோம் என்றும் என்.பி.ஆரைப் பொறுத்தவரையில் சர்ச்சைக்குரிய கேள்விகள் அனுமதிக்கப்பட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நேற்று காங்கிரஸ் குழு உத்தவ் தாக்கரேயைச் சந்தித்து பிஹார் மாதிரி தீர்மானன் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடத்தில் வைத்தது, “பிஹாரில் பாஜக கூட்டணி ஆட்சிதான் அங்கு என்.சி.ஆர்.க்கு எதிரான தீர்மானத்தை பாஜக எதிர்க்கவில்லை, எனவே இங்கு எதிர்ப்புக் காட்டினால் அது இரட்டை நிலையாகும் எனவே தீர்மானம் நிறைவேற்றுவது அவசியம் ” என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியும் மகாராஷ்ட்ராவில் என்.சி.ஆர் -ஐ அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் 2010 என்பிஆர் அமல் படுத்தலாம் அதில் கூடுதலாக எந்த ஒரு சர்ச்சைக்கேள்வியும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் என்.சிபி. தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT