டெல்லியில் அமைதி திரும்புவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி கூறினார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக வடகிழக்கு டெல்லியின் பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி நேற்று நாக்பூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைதி திரும்புவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.- பிடிஐ