இந்தியா

புகையிலை பயன்படுத்த வயது வரம்பு உயர்வு?

செய்திப்பிரிவு

சிகரெட்கள் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச் சகம் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு சமீபத்தில் தனது பரிந்துரைகளை அமைச்சகத்திடம் அளித்துள்ளது.

அதன்படி, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை உயர்த்த குழு பரிந்துரை செய்துள்ளது. இப்போது 18 வயதடைந்தோர் சிகரெட்டையும் புகையிலைப் பொருட்களையும் பயன்படுத்த முடியும். குழுவின் பரிந்துரையை ஏற்று சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற் கான வயது வரம்பை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும் இதன் மூலம் இளைஞர்கள் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் வாய்ப்புகள் குறையும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT