இந்தியா

நெடுஞ்சாலை அமைச்சகத்தில் போக்குவரத்துக்கு தனித்துறை: அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

செய்திப்பிரிவு

வாகன தொழில்நுட்பம், எரி பொருள், புகைமாசு தொடர்பாக சாலை போக்குவரத்து அமைச்ச கத்தில் தனி துறை தொடங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்கு வரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித் துள்ள பேட்டியில் கூறியிருப்ப தாவது: சாலை போக்குவரத்தில் தனி துறை தொடங்க திட்ட மிட்டுள்ளோம்.

இதற்கான அனுமதிகோரி மத்திய அமைச்சரவை, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு விரைவில் பரிந்துரை அனுப்பப்படும்.

தொழில்நுட்பம், எரிபொருள், புகைமாசு உள்ளிட்ட விவகாரங் களை தனி துறை கவனித்து கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT