டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் | கோப்புப் படம். 
இந்தியா

ட்ரம்ப்பின் இரண்டு நாள் இந்திய நிகழ்ச்சிப் பட்டியல்: வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டது

பிடிஐ

இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வருகை தரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிகாரபூர்வ நிகழ்ச்சிப் பட்டியலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ள ட்ரம்ப்பின் நிகழ்ச்சி நிரல் அட்டவணை:

பிப்ரவரி 24 திங்கள்

11.40 மணி - அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வருவார்.

12.15 மணி - சபர்மதி ஆசிரமம் (அகமதாபாத்).

13.05 மணி - மோதிரா விளையாட்டு அரங்கத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்வு.

15.30 மணி - ஆக்ராவுக்கு விமானத்தில் புறப்பாடு.

16.45 மணி - ஆக்ராவுக்கு வருகை.

17.15 மணி - தாஜ்மஹால் பார்வையிடல்.

18.45 மணி - டெல்லிக்கு விமானத்தில் புறப்பாடு.

19.30 மணி - டெல்லிக்கு வந்து சேருதல்.


பிப்ரவரி 25 செவ்வாய்

10.00 மணி - ராஷ்டிரபதி பவனில் சடங்கு வரவேற்பு.

10.30 மணி - ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்துதல்.

11.00 மணி - ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு.

12.40 மணி - ஹைதராபாத் மாளிகையில் ஒப்பந்தங்கள் பரிமாற்றம் / பத்திரிகையாளர் சந்திப்பு.

19.30 மணி - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் ராஷ்டிரபதி பவனில் சந்திப்பு.

22.00 மணி - புறப்படுதல்.

இதனை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT