சுனந்த புஷ்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் 3 மாதங்கள் வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக சசி தரூர் மீது கொலை மற்றும் வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற சசிதரூக்கு முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையை விதித்திருந்தது.
இந்தநிலையில் சசிதரூர் நார்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அவர் டெல்லி நீதிமன்றத்தில் முன் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 3 மாதங்கள் அவரை அவர் வெளிநாட்டில் தங்கியிருக்க அனுமதியளித்து நீதிபதி அஜய் குமார் குஹர் இன்று உத்தரவு பிறப்பித்தார்.