இந்தியா

மோடி அரசு பொருளாதார மந்தம் என்ற வார்த்தையையே அங்கீகரிப்பதில்லை: மன்மோகன் சிங் விமர்சனம் 

பிடிஐ

நாட்டின் பொருளாதார நிலைமைகள் பற்றி ஆளும் கட்சி நம்பிக்கையுடன் வார்த்தைகளைக் கூறி வரும் நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போதைய அரசு விமர்சனங்களை சகிப்பதில்லை இது ஆபத்தான போக்கு என்று விமர்சனம் வைத்தார்.

முன்னாள் திட்டக் கமிஷன் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் ‘பேக்ஸ்டேஜ்’ என்ற நூல் அறிமுக விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

“பொருளாதார விவகாரங்கள் விவாதிக்கப்பட வேண்டும், ஏனெனில் இன்று இருக்கும் நம்முடைய அரசு ‘பொருளாதார மந்தநிலை’ என்ற வார்த்தை இருப்பதையே அங்கீகரிப்பதில்லை. நிச்சயமாக இந்தப் போக்கு நாட்டு நலனுக்கு நல்லதல்ல.

நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் காணவிலலி எனில் நிச்சயம் நம்பகமான விடைகளை நீங்கள் ஒரு போதும் கண்டறிய முடியாது. இதுதான் உண்மையான ஆபத்து.

மான்டேக் சிங் அலுவாலியா இன்றைய ஆளும் கட்சியினர் கூறுவதற்கு மாறாக 5 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக இந்தியா 2024-25-ல் மாறும் என்பது கற்பனையே. அதே போல் 3 ஆண்டு காலத்தில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான காரணங்கள் எதுவும் இப்போதைய ஆட்சியில் இல்லை.

1990-களில் பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய போதும் நரசிம்மராவ், பி.சிதம்பரம், அலுவாலியா போன்றவர்கள் எனது தாராளமயக் கொள்கையை ஆதரித்தனர், என்றார் மன்மோகன் சிங்.

SCROLL FOR NEXT