அருணாசல பிரதேச முதல்வரை சிபிஐ அமைப்பு விசாரணை செய் வதற்கு குவாஹாட்டி உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2006ம் ஆண்டு பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, நபம் டுகி, அருணாசல பிரதேச அரசின் பல ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி ஊழல்கள் செய்தார் என்று வழக்கு தொட ரப்பட்டது. தற்போது அவர் அம்மாநில முதல்வராக உள்ளார்.
அந்த ஊழல் வழக்குகள் தொடர்பாக நபம் டுகியிடம் விசாரணை நடத்த சிபிஐ அமைப் புக்கு கடந்த 21ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமலேயே, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், எனவே அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியும், உச்ச நீதிமன்றத் தில் நபம் டுகி மனு தொடர்ந்திருந் தார். அந்த மனு நேற்று விசார ணைக்கு வந்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்தது.
மேலும், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சிபிஐ அமைப் புக்கு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.