மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி உறுதியானதை தொடர்ந்து பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு செய்த ட்வீட், இந்திய அளவில் அதிகமுறை ரீட்வீட் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் மற்றும் முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்
"இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இது பாரதத்தின் வெற்றி.
நல்ல நாட்கள் வரவுள்ளன"
என தெரிவித்தார். இந்த ட்வீட் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பயனர்களால் மீண்டும் பகிரப்பட்டுள்ளது (ரீட்வீட்). இது இந்திய அளவில் ஒரு சாதனையாகும். இந்தச் சாதனையை ட்விட்டர் தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.