மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்தவர் மான்டெக் சிங் அலுவாலியா. அவர் எழுதியுள்ள ‘பேக்ஸ்டேஜ்: தி ஸ்டோரி பிஹைண்ட் இண்டியா’ஸ் ஹை குரோத் இயர்ஸ்’ என்ற நூலில் கூறியிருப்பதாவது:
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் ய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய அரசு 2013-ல் அவசர சட்டம் கொண்டு வந்தது.
இதற்கு அப்போது, காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவசர சட்டம் முட்டாள்தனமானது என்றும் அதைக் கிழித்து குப்பையில் வீச வேண்டும் என்றும் வெளிப்படையாக தெரிவித்தார். அந்த நேரத்தில் மன்மோகன் சிங் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தார். நானும் அவருடன் சென்றிருந்தேன். எனது சகோதரரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சஞ்சீவ், அவசர சட்டத்துக்கு எதிராக எழுதிய கட்டுரையை எனக்கு இமெயிலில் அனுப்பியிருந்தார்.
எனது சகோதரர் எழுதிய கடிதத்தை மன்மோகனிடம் காட்டினேன். அதை படித்த அவர், சிறிதுநேரம் அமைதியாக இருந்து
விட்டு, ‘‘இந்த விவகாரத்தில் நான் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?’’ என்று கேட்டார். அதற்கு, ‘‘இந்த சூழ்நிலை
யில் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டாம்’’ என்றேன். இவ்வாறு நூலில் கூறியுள்ளார்.