இந்தியா

கனமழையால் மிசோரமில் நிலச்சரிவு: வீடுகள், கல்லறைகள் சேதம்

பிடிஐ

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, தலைநகர் ஐசால் பகுதியில் மூன்று வீடுகள் மற்றும் சுமார் 70 கல்லறைகள் நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்துள்ளன.

மிசோரமில் கடந்த சில நாட் களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நேற்று இரவு மூன்று வீடுகள் நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தன. மேலும் 4 வாகனங்களும் சேதமடைந்தன.

தவிர சல்ட்லாங் பகுதியில் சுமார் 50 கல்லறைகளும், ரம்ஹுன் வெங்தார் பகுதியில் உள்ள சுடுகாட் டில் சுமார் 20 கல்லறைகளும் நிலச்சரிவில் சிக்கின.

ஐசால் பகுதி தவிர, லுங்லே, சைஹா மற்றும் லாங்தாலி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மிசோரமில் உள்ள செர்சிப் மாவட்டம் மற்றும் மிசோரம்-மியான்மர் எல்லையில் உள்ள சம்பாய் மாவட்டம் ஆகியவற்றில் நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பல பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மேலும் 250 குடும்பங்களுக்குச் சொந்தமான வயல் வெளிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT