இந்தியா

நடைபாதை மீது லாரி ஏறி 5 தொழிலாளர்கள் பலி

செய்திப்பிரிவு

சண்டீகரில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது நேற்று முன்தினம் இரவு லாரி ஏறியதில் 5 தொழிலாளர்கள் பலியாயினர்.

இதுகுறித்து சண்டீகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் (கிழக்கு) குரிக்பால் சிங் சித்து கூறும் போது, “சண்டீகரின் டிரான்ஸ் போர்ட் சவுக் டிராபிக் லைட்-பாயின்ட் பகுதியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியாயினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்” என்றார்.

SCROLL FOR NEXT