காஷ்மீருக்கு வந்துள்ள வெளிநாட்டு தூதர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தூதர்கள் தால் ஏரியில் படகு சவாரியை அனுபவித்துக்கொண்டிருந்தபோது பணத்தை வீணடிப்பதாக அவர்கள் கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
யூனியன் பிரதேசத்தின் நிலைமையை முதன்முதலில் மதிப்பீடு செய்வதற்காக ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக இரண்டாவது வெளிநாட்டு தூதர்கள்குழு இன்று (புதன்கிழமை) ஸ்ரீநகருக்கு வருகை தந்துள்ளனர்.
காஷ்மீரின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்யும் முதல் குழுவாக வருகை தந்துள்ள வெளிநாட்டுத் தூதர்கள் 20 பேரும் ஐரோப்பிய ஒன்றியம், தென் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் இன்று காலை 11 மணியளவில், ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்தனர், முதல்கட்டமாக வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா நகரத்திற்கு சென்று பார்வையிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் சீரற்ற வானிலை காரணமாக அவர்களது இன்றைய திட்டம் ரத்தானது. அதற்கு பதிலாக அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் ஷிகாரா படகு சவாரிக்கு சென்றனர்.
இதற்கிடையில் வெளிநாட்டு தூதர்களின் இந்திய வருகைக்கு எதிராக மூன்று இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினர். ''வெளிநாட்டுத் தூதர்கள் இந்திய வருகையை நாங்கள் எதிர்க்கிறோம்'' என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
"இந்த நிகழ்வுகளுக்கு அரசாங்கம் பணத்தை வீணாக்குவதை நிறுத்த வேண்டும். சேமிக்கப்பட்ட பணம் காஷ்மீரின் வளர்ச்சிக்காக செலவிடப்பட வேண்டும்,'' என்று இளைஞர்களில் ஒருவர் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றபோது கூறினார்.
வெளிநாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
;ட்விட்டரில் ஏஎன்ஐ வெளியிட்டுள்ள வெளிநாட்டுத் தூதர்களின் ஷிகாரா படகு சவாரி வீடியோ: