இந்தியா

ராமர் கோயில் கட்ட மகாவீரர் ஆலயம் ரூ.10 கோடி நிதி

செய்திப்பிரிவு

பாட்னா மகாவீரர் ஆலய அறக்கட்டளை யின் செயலாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கிஷோர் குணால் கூறியதாவது:

அயோத்தியில் ராமர் கோயில்கட்டுமானப் பணிக்கு நன்கொடையாக ரூ.10 கோடி வழங்கவுள்ளோம். முதல் தவணையாகரூ.2 கோடிக்கான காசோலையுடன் நான் அயோத்தி செல்கிறேன். மாவட்ட ஆட்சியர் அனுஜ்ஜாவிடம் காசோலையை ஒப்படைக்க உள்ளேன். இதற்காகநேரம் ஒதுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரியுள்ளோம்.

அயோத்தி ராமர் கோயிலின் கருவறையில் தங்கத்தகடு பொருத்தப்பட வேண்டும் எனநாங்கள் விரும்புகிறோம். இதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வோம்” என்றார்.

இந்நிலையில் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறங்காவலர் காமேஷ்வர் சவுபால் கூறும்போது, “அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் கோயில் கட்டுமானப் பணி முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT