இந்தியா

பாசிசக் கொள்கையால் மக்களின் இதயங்களை வெல்ல முடியாது: பாஜகவின் டெல்லி தோல்வி குறித்து ஹெச்.டி.குமாரசாமி

செய்திப்பிரிவு

டெல்லி தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மிக்கு பலத்த வெற்றியைக் கொடுக்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தோல்வியடைந்ததையடுத்து, கர்நாடகா முன்னாள் முதல்வர் மஜத கட்சித் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி தன் கருத்தை தொடர் ட்வீட்களில் வெளியிட்டுள்ளார்.

அதில் அரவிந்த் கேஜ்ரிவாலை பயங்கரவாதி என்று அழைத்ததற்கு பாஜகவுக்கு டெல்லி மக்கள் சரியான பாடம் புகட்டினர் என்றார்.

“அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு என் இதயபூர்வ வாழ்த்துக்கள். பாசிசக் கொள்கைகள் தங்கள் இதயங்களை வெல்லாது என்பதை டெல்லி மக்கள் உணர்த்தி விட்டனர். டெல்லி மக்களுக்கும் ஆம் ஆத்மிக்கும் வாழ்த்துக்கள். பணபலம் அரசியல் பலத்தை மீறி வளர்ச்சியை வைத்து ஆம் ஆத்மி வென்றிருக்கிறது” என்றார்.

மேலும் அவர் தன் ட்வீட்டில் கூறும்போது, “வளர்ச்சி பற்றி பேசிய ஒருவரை (கேஜ்ரிவால்) பயங்கரவாதி என்று அழைத்ததற்கு மக்கள் சரியான பாடம் புகட்டினர்.

பிராந்தியக் கட்சியின் தேவையை வலியுறுத்திய டெல்லி மக்கள், வளர்ச்சி ஒன்றே தங்கள் முன்னுரிமை என்பதை அறிவித்ததன் மூலம் உதாரணமாக திகழ்ந்துள்ளனர்” என்றார் ஹெச்.டி.குமாரசாமி.

SCROLL FOR NEXT