இந்தியா

பாபர் மசூதியின் இடிபாடுகளை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க அயோத்தி மாவட்ட நிர்வாகம் மறுப்பு

ஆர்.ஷபிமுன்னா

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த டிசம்பர் 6, 1992-ல் இடிக்கப்பட்டது. அந்த இடத் தில் தற்காலிகமாக ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு முடி வுக்கு வந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அங்கு ராமர் கோயில் கட்டப்பட உள்ளது.

இந்நிலையில், ராமர் கோயில் -பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரர்களில் ஒருவ ரான ஹாஜி மஹபூப், பாபர் மசூதி இடிபாடுகளை தங்க ளிடம் ஒப்படைக்கக் கோரி, அயோத்தி மாவட்ட ஆட்சிய ருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு அம்மாவட்ட ஆட்சி யர் அனுஜ் குமார் ஜா அனுப்பி உள்ள பதில் கடிதத்தில், “உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி அங்குள்ள நிலம் ராம் லல்லாவுக்கு சொந்தமாகி உள்ளது. இதில் அங்கு கிடக் கும் இடிபாடுகள் யாருக்கு சொந்தம் என தனியாக எப்படி முடிவு செய்ய முடியும்? இந்த சூழலில் அவற்றை திரும்பக் கேட்பதே சரியானதல்ல” எனக் கூறியுள்ளார்.

எனினும், இதை ஏற்க மறுக்கும் ஹாஜி மஹபூப், ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும் போது, “அங்கு கட்டப்பட்டிருந்த மசூதி சட்டவிரோதமானது என நிரூபிக்கப்படவில்லை. அதை இடித்துத் தள்ளியது கிரிமினல் குற்றம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மசூதியின் புனித இடிபாடுகளை முறையாக அகற்ற வேண்டியது அவசியம் என்பதால், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன்” என்றார்.

இதனிடையே, மத்திய அர சால் அமைக்கப்பட்ட ‘ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் கூட்டம் வரும் 19-ம் தேதி டெல்லி யில் கூடுகிறது.

இதில் கோயில் கட்டத் தொடங்கும் நாள் பற்றி முடிவு செய்யப்பட உள்ளது. இக் கூட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் அறக்கட்டளை தலைவரான ஸ்ரீநிருத்திய கோபால் தாஸ் மற்றும் அயோத்தி மாவட்ட ஆட்சியரும் (இந்துவாக இருப் பவர் மட்டும்) ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினராக சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த ராமர் கோயில் கட்டு வதற்கான நிதி பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாகப் பெறப்படுகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி ரூ.1 வழங்கி தொடங்கி வைத்திருந்தார். இதற்கு பிஹாரின் பிரபலமான மஹாவீர் கோயில் அறக் கட்டளை சார்பில் ரூ.2 கோடி அளிக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT