பாஜகவை ஒரு சிலர் எதிர்ப்பதாலேயே இந்துக்களை எதிர்ப்பதாக அர்த்தம் செய்து கொள்ளத் தேவையில்லை என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி கூறினார்.
கோவா தலைநகர் பனாஜிக்கு அருகே 'விஸ்வகுரு பாரத் - ஒரு ஆர்.எஸ்.எஸ் முன்னோக்கு' நடைபெற்ற ஆர்எஸ்எஸின் இரண்டு நாள் மாநாடு நேற்று முடிவடைந்தது. அதில் பங்கேற்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசியபோது ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி கூறியதாவது:
இந்தியா ஒரு இந்து ராஷ்டிராவாக இருக்கும் என்ற கருத்துக்கு மாறாக, நாடு ஒரு இந்து ராஷ்டிரா தான் என்று நான் நம்புகிறேன், அதை தொடர்ந்து வலுப்படுத்த ஆர்எஸ்எஸ் இருக்கிறது.
இந்துத்துவா அகற்றப்பட்டால் ஒரு துண்டு நிலம் மட்டுமே இருக்கும். இந்துத்துவா தான் இதை ஒரு இந்து ராஷ்டிரமாக ஆக்குகிறது. நாட்டின் பிற மத நம்பிக்கைகளுக்கு இந்துக்கள் மதம் மாற்றப்படுவது தண்டனைக்குரிய குற்றமாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தற்போதைய சூழலில் இந்துக்களே இந்துக்களுக்கு எதிரியாக என்ற கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அதற்கு என்னுடைய பதில் என்னவென்றால், அதை அப்படி புரிந்துகொள்ள வேண்டியதில்லை. பாஜகவே ஒட்டுமொத்த இந்து மதம் அல்ல, பாஜகவை எதிர்ப்பது இந்துவை எதிர்ப்பதாக ஆகாது. அது வெறும் அரசியல். பாஜகவை இந்து மதத்துடன் சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை.
இவ்வாறு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி தெரிவித்தார்.