கோப்புப் படம் 
இந்தியா

கரோனா வைரஸ் பரவுவதால் சீன உணவகங்களுக்கு சிக்கல்: உணவுப்பொருட்கள் இறக்குமதி நிறுத்தம்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் காரணமாக மும்பையில் உள்ள சீன உணவகங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் கடந்த டிசம்பர் மாதம் சிலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே கரோனா வைரஸ் காரணமாக, வெளிநாடுகளில் உள்ள சீன உணவகங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சீனஉணவகங்கள் சில உணவுப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்றன. இதனால் கரோனா வைரஸ் பாதிப்புஏற்படுமோ என்ற அச்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் சீன உணவகங்களுக்கு செல்வதையே தவிர்த்து வருகின்றனர்.

மேலும் சீன உணவகங்களுக்கு செல்லும் சில வாடிக்கையாளர்கள், உணவு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை எங்கிருந்து பெறுகிறீர்கள் என கேட்கத் தொடங்கி உள்ளனர்.

அந்த வகையில் மும்பையில் உள்ள ஒரு சீன உணவகத்துக்கு சென்ற ஒரு வாடிக்கையாளர் ஹுனான் சிக்கன் ஆர்டர்செய்வதற்கு முன்பு, “சீனாவில்தயாரிக்கப்பட்ட டவ்பான்ஜியாங்கை (மசாலா) பயன்படுத்துகிறீர்களா” என உணவு பரிமாறுபவரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், இல்லை எனபதில் அளித்ததுடன், வாடிக்கையாளர் அடுத்த கேள்வியைக் கேட்பதற்குள், “இந்த உணவகத்தில் உணவு தயாரிக்க தேவையான அனைத்து இடுபொருட்களும் இந்தியாவிலோ அல்லதுசிங்கப்பூரிலோ தயாரிக்கப்பட்டது” என்றார். இதன் காரணமாக, சீன உணவகங்கள் உணவுப்பொருட்களுக்கான பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திஉள்ளன.

SCROLL FOR NEXT