பத்திரிகையாளர்-கவிஞர் சிராஜ் பிசரல்லி எழுதிய 'நின்னா தகலே யவகா நீடுட்டி?' (ஆவணங்களை எப்போது சமர்ப்பீர்கள்?) கவிதைத் தொகுப்பின் அட்டைப்படம். 
இந்தியா

''உங்கள் ஆவணங்களை எப்போது சமர்ப்பிப்பீர்கள்?'' - தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கவிதை

ஆதித்ய கே.பரத்பாஜ்

கர்நாடகாவில் நடந்த ஒரு கலாச்சார விழாவில் பிரதமர் மோடி மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) பற்றிய விமர்சனக் கருத்துகளுடன் ஒரு கவிதையைப் வாசித்ததற்காக பத்திரிகையாளர்-கவிஞர் சிராஜ் பிசரல்லி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; அவருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்கள் வெளிநாட்டினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரைக் கண்டுபிடிக்க நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. தேசிய குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து அனைத்து மாநிலங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக கடந்தவாரம் கர்நாடகாவில் ஒரு பள்ளி நாடகத்தில் பிரதமர் மோடியையும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் விமர்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பள்ளி தலைமைஆசிரியையையும் ஒரு மாணவனின் தாயாரையும் தேசத்துரோக சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது.

இன்னொரு நிகழ்வாக, கர்நாடகாவில் கடந்தவாரம் கொப்பலா மாவட்டத் தலைநகரான கொப்பலில் ஒரு கலாச்சார விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற பத்திரிகையாளர்-கவிஞர் சிராஜ் பிசரல்லி ஒரு கவிதை வாசித்தார். அக்கவிதை தேசிய குடிமக்கள் பதிவு பற்றியது. அது மட்டுமின்றி அதில் பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் விமர்சித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைத் தொடர்ந்து பொதுவெளியில் குறும்பும் கேலியும் மிகுந்த நடத்தைக்காகவும் பொது அமைதியை குலைக்கும் வகையில் அவமதிப்பில் ஈடுபட்டதற்காகவும் பத்திரிகையாளர் கவிஞர் சிராஜ் பிசரவல்லி மீது தற்போது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்நேரமும் அவர் கைதுசெய்யப்படலாம் என்றநிலையில் அவர் முன்கூட்டியே ஜாமீனுக்கு முயற்சி செய்தார். எனினும் அவருக்கு முன்ஜாமீன் வழங்குவதில் தயக்கம் காட்டிவரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தர்வாட் அமர்வு இன்னமும் மவுனம் சாதித்து வருகிறது.

"நான் கொப்பல் மாவட்டத்தில் பல முற்போக்கான இயக்கங்களில் ஈடுபட்டுள்ளேன், அங்கு நான் ஒரு ஆன்லைன் செய்தி தளத்தையும், ஒரு செய்தி சேனலுக்கான அறிக்கையையும் நடத்துகிறேன். பாஜக இந்தக் கவிதையை கவிதையை விடவும் அதிகமானதாக இருப்பதாகக் காண்கிறது என்றார். அதாவது பாஜக இதன் அரசியல் தொனியை பெரிது படுத்துகிறது என்றார் பிசரவல்லி.

இதற்கிடையில் அவரது கவிதை நின்னா தகாலே யவகா நீடுட்டி? (உங்கள் ஆவணங்களை எப்போது சமர்ப்பிப்பீர்கள்?) சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது. இது ஏற்கனவே ஆங்கிலம், இந்தி, உருது, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட குறைந்தது 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

''கவிதை கவிஞரைத் தாண்டிவிட்டது. கவிதை அவர்களின் உணர்வுகளுக்கும் குரல் கொடுப்பதாக மக்கள் கருதுவதால் மக்கள் அதை பரவலாக மொழிபெயர்க்கின்றனர்,'' என்று திரு பிசரல்லி கூறினார்.

திரு. பிசரல்லியின் கவிதை 'நின்னா தகலே யவகா நீடுட்டி?' (ஆவணங்களை எப்போது சமர்ப்பீர்கள்?) என்ற தலைப்பிலேயே புத்தகமதாக வெளிவந்துள்ளது. அதில் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடிமக்கள் குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிராக விமர்சனக் குரல்களே அதிகம்.

இக் கவிதைகளின் தொகுப்பு கிரியா மத்யமாவால் வெளியான கவிதைகளைத் தொகுத்து கலாபுர்கி சாகித்ய சம்மேளனா நூலாகக் கொண்டுவந்துள்ளது. இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை விமர்சிக்கும் கவிதைகள் மட்டுமின்றி நாடு முழுவதும் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை சித்தரிக்கும் ஓவியங்களும் சுவரொட்டிகளும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT