கிழக்கு டெல்லி தொகுதியிலுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்த பின்னர் வெளியே வரும் மணமக்கள், அவரது குடும்பத்தார். படம்: பிடிஐ 
இந்தியா

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் திருமண உடையில் வாக்களித்த மணமக்கள்

செய்திப்பிரிவு

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலின்போது திருமண உடையில் வந்து புதுமண தம்பதி வாக்களித்த சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி சட்டப் பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அப்போது கிழக்கு டெல்லியின் ஷகர்பூரிலுள்ள ஒரு வாக்குச்சாவடியில் திருமண உடையில் மணமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். மணமக்களுடன் அவரது குடும்பத்தாரும் திருமண உடையில் வந்து வாக்களித்தனர்.

அதைப் போலவே டெல்லி தேர்தலில் 111 வயதான மூதாட்டி கலிதாரா மண்டல் நேற்று வந்து வாக்கைச் செலுத்தினார். 1908-ம் ஆண்டு பிறந்த இவர் பல தேர்தல்களில் வாக்கைச் செலுத்தியுள்ளார்.

வாக்கைச் செலுத்திய பின்னர் அவர் கூறும்போது, “நான் ஏராளமான தேர்தல்களில் வாக்களித்துள்ளேன். வாக்குச்சீட்டு முறையிலும் எனது வாக்கைச் செலுத்தி இருக்கிறேன். வாக்குச்சீட்டுகளில் வாக்கைச் செலுத்துவதற்கு முன்பு எனது கைவிரல் ரேகையை அதிகாரிகள் பெற்ற சம்பவமும் எனக்கு ஞாபகம் உள்ளது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டதும் நினைவில் உள்ளது. அப்போது அவை மிகப்பெரிய அளவில் இருந்தன” என்றார்.

SCROLL FOR NEXT