இந்தியா

கேரள படகு விபத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

பிடிஐ

கேரள மாநிலம் கொச்சியில் புதன்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் நேற்று மேலும் 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதால், அந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே நேற்று மீண்டும் ஒரு படகு விபத்து ஏற்பட்டுள்ளது. புன்னமாடா உப்பங்கழி பகுதியில் நேற்று அதிகாலை படகு வீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் அந்த படகு முழுவதுமாக சேதமடைந்தது.

அதிலிருந்து இன்னொரு படகு வீட்டுக்கும் தீ பரவியது. அதனால் அந்த படகு வீட்டில் சில பாகங்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு படகு வீடுகளிலும், தீ விபத்தின் போது சுற்றுலா பயணிகள் யாரும் இல்லை. இதனால் உயிர்ப் பலி ஏதும் ஏற்படவில்லை.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட படகு வீட்டில் இருந்த ஒருவர், பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றதுடன், அந்தப் பகுதியில் இருந்த மற்றவர்களுக்குத் தகவல் அளித்தார்.

அதன் காரணமாக, அந்தப் படகு வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதர படகுகள் பாதுகாப்பான இடத் துக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதனால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது.

படகு வீட்டில் ஏற்பட்ட மின்சாரக் கசிவே தீ விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SCROLL FOR NEXT