பிஹார் மாநிலம் பாட்னாவில் நேற்று, ஜனதா பரிவார் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வந்தவர்களிடம் மரபணு (டிஎன்ஏ) மாதிரி பெறுவதற்காக மைதானத்தை சுற்றிலும் 80 கவுன்ட்டர்களை ஐக்கிய ஜனதா தளம் திறந்திருந்தது.
விருப்பம் உள்ளவர்கள் தங்கள் தலைமுடி மற்றும் நகத்தின் பாகத்தை வழங்குவதற்காக பிளாஸ்டிக் பை மற்றும் கடித உறை இந்த கவுன்ட்டர்களில் வழங்கப்பட்டது.
மேலும் உறையின் மீது, “பிஹாரி என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். எனது மரபணுவில் எந்தத் தவறும் இல்லை. உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் சோதித்துக் கொள்ளலாம்” என்றும் எழுதப்பட்டிருந்து. நிதிஷ்குமாரின் மரபணுவில் ஏதோ கோளாறு உள்ளது என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். “இந்த வார்த்தைகளை திரும்பப் பெறு” என்ற பிரச்சாரத்தின் கீழ் இந்த கவுன்ட்டர்களை திறந்திருந்தது.