நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் இன்று நிராகரித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது
ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசு தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் குமார் சர்மா ஆகிய இருவரும் தாக்கல் செய்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அக்ஷய் குமார் சிங்கும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பினார்.
இந்த கருணை மனுவை பரிசீலித்த குடியரசுத் தலைவர் அதனை இன்று நிராகரித்துள்ளார். இந்த வழக்கில் மீதமுள்ள ஒரே குற்றவாளியான பவன்குமார் மட்டுமே இன்னமும் கருணை மனுவை தாக்கல் செய்யவில்லை.