மத்திய பிரதேச மாநிலத்தில் நோயாளி ஒருவருக்கு விலங்குகளுக்குச் செலுத்தப்படும் மருந்து செலுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.
ரெய்சன் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் முன்னே பாய் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு குளுகோஸ் செலுத்தப்பட்டது. அப்போது அவர் எதேச்சையாக குளுகோஸ் பாட்டிலில் ஒட்டப்பட் டிருந்த வாசகத்தைப் படித்தார்.
அதில் 'விலங்குகளுக்கானது' என்று எழுதப்பட்டிருந்தது. இதனை அறிந்தவுடன், அலறி அடித்துக்கொண்டு தன் படுக்கை யில் இருந்து எழுந்து கூச்சலிட் டார். தகவல் அறிந்த மற்ற நோயாளிகளும் அவருடன் இணைந்துகொண்டு மருத்துவ மனை ஊழியர்களை விமர்சித்தனர்.
இதுகுறித்து சார் ஆட்சியர் உம்ராவ் சிங் மாரவி கூறும்போது, "முன்னே பாய்க்கு விலங்கு களுக்குச் செலுத்தப்படும் மருந்து செலுத்தப்பட்டது உண்மைதான். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.