இந்தியா

நீண்ட நேர பட்ஜெட் உரை சாதனை; கடைசி இரண்டு பக்கங்களில் அயர்ந்த நிதியமைச்சர்

பிடிஐ

இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது, இரண்டரை மணி நேர பட்ஜெட் உரையை வாசித்து சாதனை படைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடைசி இரண்டு பக்கங்கள் இருக்கும்போது தனது உரையை குறைத்துக்கொண்டார்.

நிதிஅமைச்சர் சீதாராமன் மக்களவையில் இன்று 'பட்ஜெட் 2020' தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 வரை அவர் தனது பட்ஜெட் உரையை வாசித்தார். நிதியமைச்சரின் இன்றைய அவரது பட்ஜெட் உரை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் நீளமாக அமைந்திருந்தது.

இரண்டரை மணிநேர தனது நீண்ட உரையை அவர் வாசித்து முடிக்க இன்னும் இரண்டு பக்கங்களே இருந்தநிலையில், அவருக்கு அயற்சி ஏற்பட்டது.

நிதியமைச்சர் சற்றே, அசவுகரியமாக தோன்றிய நிலையில் வியர்த்தது. இதனால் சக அமைச்சர்கள் தங்கள் கைவசம் வைத்திருந்த சில மிட்டாய்களை அவரிடம் வழங்கினர். அதை அவர் உட்கொண்ட பிறகும் அவருக்கு அயற்சி குறையவில்லை.

இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தனது உரையின் மீதமுள்ள பகுதியை வாசித்ததாகக் கருதிக்கொள்ளும்படி (நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டவாறு) தெரிவித்துவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்.

SCROLL FOR NEXT