இந்தியா

மலைவாழ் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் முயற்சி: விவசாயப் பணிகளுக்கு உதவும் சிஆர்பிஎப்

பிடிஐ

சத்தீஸ்கர் மாநிலத்தில் மலைவாழ் மக்களின் மனதில் இடம் பிடிக்கும் முயற்சியாக அவர்களது விவசாயப் பணிகளுக்கு உதவி வருகின்றனர் சிஆர்பிஎப் வீரர்கள்.

சுக்மா மாவட்டம் நக்சல் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) அதிக அளவில் குவிக்கப்பட்டுள் ளனர். நக்சல்களை ஒடுக்கும் பணியுடன் இப்போது அப்பகுதி மக்களின் நல்லெண்ணெத்தை பெறும் முயற்சியிலும் சிஆர்பிஎப் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் ஒரு செயல்திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி மலைவாழ் மக்களின் விவசாயப் பணிகளுக்கு சிஆர்பிஎப் வீரர்கள் உதவி வருகின்றன. டிராக்டர் மூலம் நிலத்தை உழுவது, புதர் மண்டி கிடக்கும் பகுதிகளை பயிர் செய்வதற்கு ஏற்ற வகையில் சீரமைப்பது போன்ற பணிகளில் வீரர்கள் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் கூறியது: பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நவீன தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் பயன்படுத்த வசதியில்லாத மலைவாழ் மக்களுக்கு அவற்றை பயன்படுத்தி வேலையை சுலபமாக முடிக்க வீரர்கள் உதவி வருகிறார்கள். இதற்கு மலைவாழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 100 ஏக்கர் நிலத்தை வீரர்கள் டிராக்டர்கள் மூலம் உழுது கொடுத்துள்ளனர். முதலில் வீரர்கள் அளிக்கும் உதவியைப் பெற மக்கள் தயக்கம் காட்டி வந்தனர். ஏனெனில் அவர்கள் ராணுவத்தை சேர்ந்தவர்கள் என்ற பயம் இருந்தது. இப்போது அவர்கள் சகஜமாக பழகி வருகின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT