உத்தரப் பிரதேச மாநிலம், புலந்துஷார் மாவட்டம், கேசர்கலன் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால்காரர் பைசுல் ஹசன் காத்ரி (81). இவரது மனைவி தஜமுல்லி பேகம். கடந்த 2011-ம் ஆண்டில் பேகம் காலமானார்.
காத்ரி, தனது மனைவியின் நினை வாக சொந்த கிராமத்தில் மினி தாஜ் மஹாலை கட்டி வருகிறார். இதற்கு இது வரை அவர் ரூ.14 லட்சம் செலவு செய் துள்ளார். அதற்குமேல் பணமில்லாமல் கட்டிடப் பணிகள் அரைகுறையாக நிற்கின்றன.
இதுகுறித்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை அறிந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், அரசு சார்பில் அவருக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திர கலா கூறியபோது, முதல்வரின் அறிவுரைபேரில் முதியவர் காத்ரியிடம் பேசி அவரின் மினி தாஜ்மஹால் பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந் தேன். இந்த விவரங்கள் முதல்வரிடம் அளிக்கப்படும். விரைவில் முதல்வரை காத்ரி சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.