இந்தியா

அமைச்சர் ஆவதற்கு கல்வி கற்க வேண்டிய அவசியமில்லை: சொல்கிறார் உ.பி. சிறைத்துறை அமைச்சர்

ஏஎன்ஐ

அமைச்சர் படித்திருக்கவேண்டியது அவசியமில்லை என்று உத்தரபிரதேச சிறைத்துறை அமைச்சர் ஜே.கே.சிங் ஜெய்கி கூறினார். ஒரு அமைச்சரின் கீழ் செயலாளர் பணியாளர்கள் என்று நிறைய பேர் உள்ளனர் என்று அவர் வலியுறுத்தினார்.

லக்னோவிலிருந்து 100 கி.மீ.தொலைவில் உள்ள சீதாபூரில் சேத் ராம் குலாம் படேல் மெமோரியல் இன்டர்ன் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஒரு விழாவில் உ.பி. சிறை மற்றும் சிவில் சேவை மேலாண்மை அமைச்சர் ஜே.கே.சிங் ஜெய்கி உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மாணவர்கள் மத்தியில் கூறியதாவது:

நாட்டின் அமைச்சராக வரக்கூடியவர் கல்வி கற்க வேண்டுமென்ற தேவையில்லை. நான் ஒரு அமைச்சர், எனக்கு கீழ் செயலாளரும் ஊழியர்களும் என நிறைய பேர் பணியாற்றுகிறார்கள்.

நான் சென்றுதான் சிறையை இயக்க வேண்டுமென்ற எந்த அவசியமுமில்லை. அங்கு இதற்காக வேலை செய்ய பணியில் அமர்ந்திருக்கும் சிறை அதிகாரிகளும் ஜெயிலரும் அதை இயக்க வேண்டும். .

சமுதாயத்தில் படித்தவர்கள் படிக்காத மக்களைப் பற்றி தவறான கருத்தை உருவாக்குகிறார்கள்.

மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் போன்ற படித்த தொழில் வல்லுநர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது, ​​அவர்கள் பெரும்பாலும் ஒரு சாதாரண உயர்நிலைப் பள்ளி படித்த அரசியல்வாதியைப் பற்றி பேசுகிறார்கள், இவர்களுக்கு அரசியல் அமைப்பு இயங்குவது பற்றி அதிகம் தெரியாது. அதேநேரம் படிக்காதவர்கள்தான் படித்தவர்களை ஆணையிடுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

என்னுடைய உயர்நிலைப் பள்ளி நாட்களில் என்னை தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி யாரும் என்னை கேட்கவில்லை, நான் அரசியசியல் சேர விரும்புவதற்கு இது ஒன்று போதும் என்பது தெளிவாகத் தெரிந்தது.

எந்தவொரு பிரச்சினைக்கும் என்னால் தெளிவாக தீர்வுகாண முடிகிறதென்றால் அதற்குக் காரணம் நான் அரசியலுக்குத்தான் வர விரும்புகிறேன் என்ற எனக்குள் இருந்த தெளிவான நோக்கம்தான் காரணம். இதற்கு படிப்பு எந்தவிதத்திலும் காரணம் இல்லை.

இவ்வாறு மாணவர்கள் மத்தியில் உ.பி.சிறைத் துறை அமைச்சர் ஜே.கே.சிங் ஜெய்கி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT