சீனா சென்று திரும்பிய சண்டிகரைச் சேர்ந்த ஒருவருக்கு காரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் அவர் அங்குள்ள அரசு மருத்துமவனை தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு சென்று வந்த வெளிநாட்டினருக்கும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் மூலமாக பல்வேறு நாடுகளிலும் கரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மும்பை, ஹைதரபாத் உள்ளிட்ட நகரங்களில் சீனா சென்று வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்ததால் அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் அவர்களுக்கு பாதிப்பில்லை.
இந்தநிலையில் சீனா சென்று திரும்பிய சண்டிகரைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் அவர் அங்குள்ள அரசு மருத்துமவனை தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சண்டிகர் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில் ‘‘சீனாவில் இருந்து திரும்பிய அந்த நபருக்கு சளி, காய்ச்சல் உள்ளது. இதனால் அவரை தனிமை வார்டில் அனுமதித்துள்ளோம். அவரது ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.