இந்தியா

ஷாகின்பாக் போராட்டச் சூழலை உருவாக்குபவர்களுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்: தர்மேந்திர பிரதான் காட்டம்

செய்திப்பிரிவு

டெல்லியில் ஷாகின்பாக் போன்ற சூழலை உருவாக்கும் நபர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

ஷாகின்பாக் பகுதி என்பது தெற்குடெல்லிக்கு அருகே யமுனை நதிக்கரையில் இருக்கும் பகுதியாகும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இங்குதான் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி: பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லி தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘டெல்லி மக்கள் அமைதியை தான் விரும்புகிறார்கள். குழப்பத்தையும், கலவரத்தையும் அல்ல. டெல்லியில் ஷாகின்பாக் போன்ற சூழலை உருவாக்கும் நபர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். டெல்லி முதல்வர் கேஜ்வரிவால் எந்போதெல்லாம் விரும்புகிறாரோ அப்போதெல்லாம் ஷாகின்பார்க் சாலை மீண்டும் திறக்கப்படும்’’ இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

SCROLL FOR NEXT