மக்களவையில் லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.
இந்த தீர்மானம் மீதான விவாதத்தின்போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதிலளித்து பேசும்போது, “சுஷ்மா ஸ்வராஜ் மீதான குற்றச்சாட்டுகளை அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது. எனவே, சுஷ்மா ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி வரமாட்டார். ஒன்றும் இல்லாத பிரச்சினையை காங்கிரஸ் கிளறுகிறது” என்றார். ஜேட்லி பேசிக்கொண்டிருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து வெளியேறினர். அப்போது சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிரான தீர்மானம் குரல்வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.