இந்தியா

நாங்கள் வரி கட்டுகிறோம்; இந்த காய்கறி சந்தை ஏன் இவ்வளவு சுகாதாரக் கேடாக உள்ளது?: உ.பி.யில் வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்

ஏஎன்ஐ

உபியில் ஒரு காய்கறி சந்தை சுகாதாரக் குறைவாக இருப்பதாகக் கூறி வியாபாரிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லக்னோவிலிருந்து 350 தொலைவில் உள்ள மொராதாபாத்தில் காய்கறி சந்தைக்கென 'நவீன் மண்டி' உள்ளது. ஆனால் எவ்வித சுகாதார வசதியும் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளதால் வியாபாரிகள் தங்களை நோய் தாக்கக் கூடுமென அஞ்சுகின்றனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

நாங்கள் இப்பகுதியில் பல ஆண்டு காலமாக கடைகள் வைத்துள்ளோம். இந்த சந்தை கட்டப்பட்டு 30 அல்லது 35ஆண்டுகள் ஆகியிருக்கக்கூடும். ஆனால் அவை சரியான பராமரிப்பின்றி சரிவின் விளிம்பில் உள்ளன.

158 கடைகள் மட்டுமே இந்த சந்தையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் 408 பேருக்கு உரிமம் தந்துள்ளார்கள். சட்டவிரோதமாக உள்ள கடைகளால் சந்தையில் கடும்நெருக்கடி காரணமாக சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. காய்கறி மற்றும் பழக்கடைகள் நிறைந்த இந்த சந்தையில் சுகாதாரக் கேடு இருப்பதால் எங்களுக்கு நோய் தாக்கக்கூடும் என்ற பயமும் உள்ளது.

நாங்கள் வரி கட்டுகிறோம், அதற்கு ஏதாவது செய்யவேண்டாமா இந்த அரசாங்கம். இந்த சந்தை நிர்வாகத்திற்கென உள்ள அதிகாரி இந்த நிமிடம் வரை இங்கு வந்து பார்த்ததில்லை. எங்க கோரிக்கைகளை யாரும் செவிகொடுத்து கேட்கவில்லை. அதனால்தான் உண்ணாரவிரதத்தில் இறங்கியுள்ளோம்.

இவ்வாறு சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT