சீனாவில் இருந்து திரும்பிய 4 பேரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தனிமை வார்டில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனர்.
இதனால் அனைத்து நாடுகளும் கரோனா வைரஸ் பாதிப்பு வராமல் இருக்க, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளைத் தீவிர பரிசோதனைக்குப் பின்பே அனுமதிக்கின்றன. இந்தியாவிலும் விமான நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு சீனாவில் இருந்து வருவோர் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த 4 பேர் சீனாவில் இருந்து திரும்பியுள்ளார்கள். அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, கரோனா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகளான இருமல், சளி, போன்றவை இருந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நடத்திய சோதனையில் பாதிப்பில்லை என தெரிய வந்தது.
இந்தநிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 4 பேர் அண்மையில் சீனா சென்று திரும்பியுள்ளனர். இதையடுத்து அவர்கள் ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கரோனா வைரஸ் பாதிப்புக்கான ஆரம்பக் கட்ட அறிகுறி ஏதுமில்லை. இருப்பினும் அவர்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை நடத்தவும், கண்காணிப்பில் வைத்திருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.