இந்தியா

குடியரசு தினத்தைப் புறக்கணிக்க தீவிரவாதக் குழுக்கள் அழைப்பு: அசாமில் நான்கு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

பிடிஐ

நாடு தனது 71 வது குடியரசு தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் இன்று காலை அசாமில் நான்கு குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சில ஆதாரங்களின்படி, இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் உல்ஃபா (இன்டிபென்டன்ட்) தீவிரவாதக் கும்பலின் கைவேலைதான் என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. எனினும் இதுவரை எதுவும் நிறுவப்படவில்லை.

வடகிழக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பல அமைப்புகளுடன் இணைந்து உல்ஃபா (ஐ) தீவிரவாத இயக்கமும் குடியரசு தின கொண்டாட்டங்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்தது.

அப்பர் அசாமை உலுக்கிய இந்த குண்டுவெடிப்புகளும் காலை 8.15 முதல் 8.25 வரை 10 நிமிட இடைவெளியில் நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குடியரசு தினம் விடுமுறை என்பதால், மக்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருந்ததால், எந்தவொரு விபத்து நடந்ததற்கான தகவல்களும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) பத்மநாப் பருவா பிடிஐயிடம் கூறியதாவது:

திப்ருகரில் மூன்று மற்றும் சாரைடியோ மாவட்டங்களில் ஒன்று - ஞாயிற்றுக்கிழமை காலை சாராய்டோ மாவட்டத்தின் சோனாரி காவல் நிலைய பகுதியில் உள்ள தியோகாட்டில் உள்ள ஒரு கடைக்கு வெளியே முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து திப்ருகார் மாவட்டத்தில் மூன்று வெடிப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன - கிரஹாம் பஜார் மற்றும் ஏ.டி சாலையில் குருத்வார அருகே இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களும், மற்றொன்று எண்ணெய் நகரமான துலியாஜன் டினியாலியின் காவல் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் வெடித்ததாக துலியாஜன் டினியாலியில் கிடைத்த சி.சி.டி.வி காட்சிகள், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் ஒரு கையெறி குண்டு வீசுவதைக் காட்டுகின்றன.

கிரஹாம் பஜார் மற்றும் ஏடி சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களும் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளால் நிகழ்ந்துள்ளது.

மூத்த காவல் அதிகாரிகள் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர், குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றிலும் காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அசாம் முதல்வர் கண்டனம்

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை கண்டித்து அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதில் முதல்வர் கூறியுள்ளதாவது:

அசாமின் ஒரு சில இடங்களில் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடத்தியவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்கள். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு புனித நாளில் பயங்கரவாதத்தை உருவாக்க நடத்தப்பட்ட கோழைத்தனமான முயற்சி இது. மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட பின்னர் பயங்கரவாத குழுக்கள் விரக்தியை இவ்விதமாக வெளிப்படுத்தியுள்ளன.

குற்றவாளிகளை கைதுசெய்து சிறையில் அடைக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள காவல்துறை விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் சோனோவால் அசாம் காவல்துறை தலைவர் நாயகம் பாஸ்கர் ஜோதி மகாந்தாவிடம் நிலைமையை எச்சரிக்கையாக கையாளவும், குண்டு வெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT