இந்தியா

டெல்லி சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

ஐஏஎன்எஸ்

டெல்லியில் நடைபெற்றுவரும் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஷாஹீன் பாக் குடியரசு தின விழாவில் ரோஹித் வெமுலாவின் தாயார் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஜாமியா மிலியா அருகேயுள்ள ஷாஹீன் பாக் தோட்டத்தில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. குடியரசு தினமான இன்று இந்நிகழ்வில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட பி.எச்.டி மாணவர் ரோஹித் வெமுலாவின் தாயார் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

ஷாகின்பாக் பகுதி என்பது தெற்குடெல்லிக்கு அருகே யமுனை நதிக்கரையில் இருக்கும் பகுதியாகும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இங்குதான் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

சமீப நாட்களாகவே ஷாஹீன் பாக் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முகமாக இந்த பிரச்சினையில் முஸ்லீம்-தலித் ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிகளின் அறிகுறியாக வெமுலாவின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

கொடியேற்றத்தின்போது தபாங் டாடிஸ் (அச்சமற்ற மூதாட்டிகள்) என அழைக்கப்படும் மூன்று வயதான பெண்கள் மற்றும் முன்னாள் ஜே.என்.யூ மாணவர் உமர் காலித் ஆகியோரும் ரோஹித் வெமுலாவின் தாயாருடன் உடன் இருந்தனர்.

குடியரசு தினத்தன்று வலிமையைக் காட்டும்விதமாக குறைந்தது பத்து லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 5 ஆயிம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தேசிய கீதத்தை தொடர்ந்து "பாரத் மாதா கி ஜெய்", "விசாரணை ஜிந்தாபாத்" மற்றும் "என்.ஆர்.சி-சி.ஏ.ஏ முர்தாபாத்" என்ற முழக்கங்கள் எழுந்தன.

SCROLL FOR NEXT