சீனாவிலிருந்து திரும்பிய 7 பேரைக் கண்காணித்து பரிசோதனைக்கு உட்படுத்தியதில் கரோனா வைரஸுக்கான எந்தவொரு அறிகுறியும் அவர்களிடம் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் சனிக்கிழமை அன்று தெரிவித்தார்.
இந்தியாவில் கரோனா வைரஸைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஆயத்தத்தை ஆய்வு செய்வதற்காக மறுஆய்வுக் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறியதாவது:
சீனாவிலிருந்து வந்த ஏழு பயணிகளின் மாதிரிகள் ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.வி புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
புது டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய ஏழு நியமிக்கப்பட்ட விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும் ஏழு மாநிலங்களுக்கு பலதரப்பட்ட மத்திய குழுக்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று உத்தரகண்ட் முதல்வரிடம் பேசினார் மற்றும் நேபாளத்தின் எல்லையில் வரும் பயணிகளிடம் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.
அண்மைய நாட்களில் சீனாவிலிருந்து திரும்பிய நூற்றுக்கணக்கான பயணிகளில் 11 பேர் - கேரளாவில் ஏழு, மும்பையில் இரண்டு மற்றும் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் தலா ஒருவர் - ஆபத்தான கரோனா வைஸ் இருப்பதை கண்டறிய மருத்துவமனைகளில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும், சீனாவிலிருந்து திரும்பிய 7 பேரைக் கண்காணித்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கரோனா வைரஸுக்கான எந்தவொரு அறிகுறியும் அவர்களிடம் இல்லை என்று கண்டறியப்பட்டது. .
இவ்வாறு மத்திய அமைச்சர் இன்று தெரிவித்தார்.