சீனாவில் கரோனா வைரஸ் நோய்க்தாக்கம் குறித்த அச்சம் உலகம் முழுவதும் பீதியை உருவாக்கிய நிலையில் பொருளாதார நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளதால் அது உலகளாவிய பங்குச் சந்தைகளையும் வீழ்ச்சியடைய வைத்துள்ளது.
நாட்டின் 29 மாகாண அளவிலான பிராந்தியங்களில் கரோனா வைரஸால் 830 பேருக்கு நிமோனியா நோய் அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். கரோனா வைரஸ் நோய்த் தாக்கி இதுவரை 41 உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் சந்திர புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நாட்டிலிருந்து வெளியே செல்வதும் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு வரும் பரபரப்பான பயண காலங்கள் என்பதால் கரோனா நோய் தாக்கம் உலகம் முழுவதும் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆசிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் கடுமையான பாதகமான எதிர்விளைவு காணப்பட்டது.
வியாழக்கிழமை, சீன பங்குச் சந்தைகள் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதன் மிகப்பெரிய சரிவை பதிவு செய்தன. இருப்பினும், எண்ணெய் விலைகள் கணிசமாக சரிந்ததால் இந்திய சந்தைகள் உயர்ந்தன. சீனாவில் வைரஸ் நோய் தாக்கம் எரிபொருள் தேவையை குறைக்கக்கூடும் என்று கருதப்பட்டது. இதனால் உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் பிராண்ட் ஒரு பீப்பாய் 62 டாலராக சரிந்தது.
இதற்கிடையில் உஹான் நகரத்தின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 500 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயின்ற போதிலும், அவர்களில் பெரும்பாலோர் சீனப் புத்தாண்டு விடுமுறைக்காக வீட்டிற்குச் சென்றதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது எழுந்துள்ள கரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் காரணமாக 2002-2003ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 800 பேரை பலிவாங்கியது. 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை இது பாதித்தது.