அரசு அனுமதியின்றி மதக் கல்வி வழங்குவதைத் தவிர்க்க வேண்டுமென்ற உத்தரவை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பள்ளிகளுக்கு வழங்கும்படி கேரள உயர்நீதிமன்றம் அம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பிரத்தியேக மத போதனைகளை வழங்கும் ஒரு பள்ளியை மூடுவதற்கான அரசின் நடவடிக்கையை எதிர்த்து கேரள நீதிமன்றத்தல் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் மனுதாரர் தனது மனுவில், பிரத்தியேக மத போதனைகளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதன் மூலம் சமூகத்தின் மதச்சார்பற்ற சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்ற அடிப்படையில் ஒரு பள்ளியை மூடுவதற்கான அரசின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மனுவை தள்ளுபடி செய்து வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதி ஏ முகம்மது முஸ்டாக் கூறியதாவது:
அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 25, பிரிவு 29 மற்றும் பிரிவு 30 ன் கீழ் சிறுபான்மையினருக்கு அரசியலமைப்பு சிறப்பு பாதுகாப்பு அளிக்கிறது. 29வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள கலாச்சார உரிமைகள், கல்வியின் தன்மையையும் உள்ளடக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
30 வது பிரிவின் கீழ் கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் உள்ள உரிமையானது கல்விக்கான விருப்ப உரிமையும் அடங்கும், இது சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் எந்தவொரு கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டது.
இருப்பினும், இந்த உரிமைகள் கல்வியின் மதச்சார்பற்ற தன்மையை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது. இந்த உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை மீற முடியாது. அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளுக்கு இணங்க இதை மட்டுமே செயல்படுத்த முடியும்.
தொடக்கக் கல்வியை வழங்குவது தொடர்பாக சிறுபான்மை நிறுவனங்களின் நிலை மாநில செயல்பாட்டுடன் தொடர்புடையது. எனவே சிறுபான்மை நிறுவனங்கள், மாநில செயல்பாட்டாளர்களாக தங்கள் பங்கைக் குறைத்து, பிரிவு 29 மற்றும் 30 இன் கீழ் குறுங்குழுவாத கல்வியைப் பாதுகாக்க முடியாது.
கட்டாய தொடக்கக் கல்வியின் பிரிவு 21 ஏ மற்றும் ஆர்டிஇ சட்டம் ஆகியவை மாநிலத்தின் மதச்சார்பற்ற செயல்பாட்டின் எல்லைக்கு அப்பாற்பட்ட கல்வி பற்றிய கருத்தை கருத்தில் கொள்ளவில்லை.
ஆனால் மதத்தை ஊக்குவிக்கும் சுதந்திரத்தை சிறுபான்மை நிறுவனங்கள் எடுத்துக்கொண்டால் அது மதத்தின் அடிப்படையில் அத்தகைய பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படும்.
எனவே எந்த ஒரு கல்வி நிறுவனமும் அரசாங்கத்தின் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகளை மூடிவிடலாம். அனுமதி பெறாமல் மத அறிவுறுத்தல் அல்லது மதக் கல்வி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவை மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பள்ளிகளுக்கு வழங்வேண்டும். அரசின் இந்த உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவிடுங்கள்.
இவ்வாறு கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.