இந்தியா

ஆக்ஸ்போர்டு அகராதியின் புதிய பதிப்பில் ‘ஆதார்' உள்ளிட்ட 26 வார்த்தைகள் சேர்ப்பு

செய்திப்பிரிவு

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி ஆண்டுக்கு 4 முறை புதுப்பிக்கப்படுகிறது. அதன்படி ஆக்ஸ்போர்டு அகராதியின் புதிய பதிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆதார், ஹர்த்தால், ஷாதி, ஷால் உள்ளிட்ட 26 இந்திய ஆங்கில வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 22 வார்த்தைகள் அச்சு பதிப்பிலும் 4 வார்த்தைகள் ஆன்லைன் பதிப்பிலும் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக 384 இந்திய ஆங்கில வார்த்தைகளும் 1000 இந்திய ஆங்கில சொற்றொடர்களும் புதிய பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் 29 வார்த்தைகளும் அகராதியில் இடம்பிடித்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 550 வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு அகராதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு அகராதியின் நிர்வாக இயக்குநர் பாத்திமா கூறும்போது,"உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றின் ஆங்கில வார்த்தைகள் அகராதியில் இணைக்கப்பட்டுள்ளன. எங்களது அகராதி ஆங்கில மொழியின் பாதுகாவலனாக விளங்குகிறது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT