இந்தியா

இந்திரா காந்தி கொலையாளிகளை தூக்கிலிட்ட எனது தாத்தாவே என் குரு- நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிடும் பவன் குமார் தகவல்

செய்திப்பிரிவு

இந்திரா காந்தி கொலையாளி களை தூக்கிலிட்ட எனது தாத்தாவே எனது குரு என்று நிர்பயா கொலை குற்றவாளி களை தூக்கில் இடவுள்ள பவன் குமார் கூறினார்.

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் பிஸியோதெரபி மாணவி நிர்பயா, ஓடும் பஸ்ஸில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய் யப்பட்டு கீழே தள்ளப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவி 2 வாரங்களுக்கு பிறகு இறந்தார்.

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு வரும் 1-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்த 54 வயது பவன் குமார் தேர்வு செய்யப்பட் டுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை வழக்கு குற்ற வாளிகளையும் 1982-ம் ஆண்டு கொடூர கொலை வழக்கு குற்ற வாளிகள் இருவரையும் பவன் குமாரின் தாத்தா தூக்கிலிட் டுள்ளார்.

இந்நிலையில் 3-வது தலை முறையாக பவன் குமார் தூக்கி லிடும் பணியை செய்கிறார். என்றாலும் முதல்முறையாக பவன் குமார் இப்பணியை செய்கிறார்.

இந்நிலையில் பவன் குமார் கூறும்போது, “எனது தாத்தாவே எனது குரு. எனக்குக் பிறகு எனது மகன்கள் இப்பணியை செய்வார்கள் என எதிர்பார்கிறேன். நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடு வதில் துளியும் வருத்தமில்லை. அவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். அவர்கள் கொடூர மானவர்கள் என்பதால் உயிரிழக்கப் போகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளி நாட்டிலும் இருந்தும் என்னுடன் பேச பலர் விரும்புகின்றனர். நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பிறகு எனது மதிப்பு உயரும் என கருது கிறேன்” என்றார்.

பவன் குமாரின் பாதுகாப் புக்காக ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளார். இதனிடையே டெல்லி திஹார் சிறையில் நிர்பயா கொலை குற்றவாளி களை தூக்கிடுவதற்காக ஏற் பாடுகள் நடந்து வருகின்றன. தூக்கு கயிற்றின் முடிச்சுக்காக குற்றவாளிகளின் கழுத்து சுற்றளவு எடுக்கப்பட்டுள்ளது. தண்டனையை தங்கு தடையின்றியும் விரைவாகவும் நிறைவேற்ற தூக்கு கயிற்றில் வாழைப்பழம் தடவப்படும் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT