இந்தியா

காய்கறிகள் உற்பத்தியில் நாட்டிலேயே மேற்குவங்கம் முதலிடம்

செய்திப்பிரிவு

கடந்த 2018-19 நிதியாண்டில் காய்கறிகள் உற்பத்தியில் மேற்குவங்க மாநில முதலிடம் வகிக்கிறது.

2018- 19-ம் ஆண்டில் நாடுமுழுவதும் காய்கறிகள் உற்பத்தி விவரங்கள் வெளியாகியுள்ளன. 29.55 மில்லியன் டன்கள் அளவிற்கு காய்கறி உற்பத்தி செய்து மேற்கவங்க மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டின் மொத்த காய்கறிகள் உற்பத்தியில் மேற்குவங்கத்தின் பங்கு 15.9 சதவீதமாகும்.

உத்தர பிரதேசத்தில் 27.70 மில்லியன் டன்கள் அளவிற்கு காய்கறிகள் உற்பத்தி செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நாட்டின் காய்கறிகள் உற்பத்தியில் உத்தர பிரதேசம் 14.9 சதவீதமாகும்.

நாட்டின் காய்கறிகள் உற்பத்தியில் 9.6 சதவீதத்துடன் 3 மத்திய பிரதேசம் 3-வது இடத்தில் உள்ளது. 9 சதவீத காய்கறிகள் உற்பத்தியில் பிஹார் 4-வது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வரின் விவசாயத்துறை ஆலோசகர் பிரதீப் குமார் மஜூமுதார் கூறுகையில் ‘‘காய்கறிகள் உற்பத்தியில் மேற்குவங்கம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. எங்கள் மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் சாதனை இது. இதன் மூலம் மேற்குவங்க விவசாயிகளின் வருவாய் அதிகரித்துள்ளது’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT