அசாம் முதல்வர் சர்பானந்த் சோனாவால் முன்னிலையில் 8 தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் இன்று சரணடைந்தனர். 
இந்தியா

முன் எப்பொழுதும் இல்லாத அளவில் 644 தீவிரவாதிகள் சரண்: அசாம் முதல்வர் முன்னிலையில் ஆயுதங்களைத் துறந்தனர்

பிடிஐ

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 8 இயக்கங்களைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் தங்களிடமிருந்த ஆயுதங்களை இன்று கீழே போட்டுவிட்டு அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில் சரணடைந்தனர்.

அசாமில் தனிநாடு கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பல ஆண்டுகளாக ஆயுதக் குழுக்கள் இயங்கிவருகின்றன. இந்த அமைப்புகள் அசாமுக்குள்ளும் இந்தியாவுக்கு வெளியே அண்டைநாடுகளில் இருந்தும் செயல்பட்டு வருகின்றன.

அரசுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் இருந்துவரும் இந்த ஆயுதக்குழுக்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.

தடைசெய்யப்பட்ட உல்ஃபா (ஐ), என்.டி.எஃப்.பி, ஆர்.என்.எல்.எஃப், கே.எல்.ஓ, சி.பி.ஐ (மாவோயிஸ்ட்), என்.எஸ்.எல்.ஏ, ஏ.டி.எஃப் மற்றும் என்.எல்.எஃப்.பி ஆகிய தீவிரவாத இயக்கங்களின் கிளர்ச்சி உறுப்பினர்கள் 644 பேர் இன்று தலைநகர் அசாமில் நடந்த ஒரு சிறப்புநிகழ்ச்சியில் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில் சரணடைந்தனர்.

இதுகுறித்து அசாம் காவல்துறைத் தலைவர் பாஸ்கர் ஜோதி மகாந்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், இது மாநிலத்திற்கும் அசாம் காவல்துறையினருக்கும் ஒரு முக்கியமான நாள். மொத்தம் 644 பேர் மற்றும் எட்டு போராளிக்குழுக்களின் தலைவர்கள் ஆயுதங்களை கீழே போட்டனர். சமீபத்திய காலங்களில் இது போராளிகளின் மிகப்பெரிய சரணடைதலில் ஒன்றாகும். அவர்களிடமிருந்த 177 ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.'' என்றார்.

SCROLL FOR NEXT