இந்தியா

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்து மகாசபாவின் ‘பிரிவினை அரசியலை’ எதிர்த்தார்: மம்தா பானர்ஜி பேச்சு

பிடிஐ

இந்து மஹாசபாவின் ‘பிரிவினிவாத அரசியலை’ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எதிர்த்தார் என்றும் மதச்சார்பற்ற இந்திய ஒற்றுமைக்காகப் பாடுபட்டார் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நேதாஜி பிறந்த தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த மம்தா பானர்ஜி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை நேதாஜி வலியுறுத்தினார் என்றும், அவருக்கு அஞ்சலி செலுத்துவது இந்திய ஒற்றுமைக்காக போராடுவதைக் குறிக்கும் என்று பேசினார்.

நேதாஜி பிறந்த தினத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பேசிய மம்தா, “நேதாஜி இந்து மகாசபாவின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்தார். அவர் மதச்சார்பற்ற இந்தியாவுக்காக போராடினார், இன்று மதச்சார்பின்மையைப் பின்பற்றுபவர்களை வெளியேற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் சந்திர போஸ் மறைவு குறித்த புதிரை விடுவிக்க மத்திய அரசு சீரியஸாகச் செயல்படவில்லை. சில கோப்புகளை மட்டும் வெளியிட்டனர். ஆனால் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 70 ஆண்டுகள் சென்ற பிறகும் அவருக்கு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியவில்லை என்பது வெட்கக்கேடானது” என்றார்

SCROLL FOR NEXT