டார்ஜிலிங்கில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 4 கிலோ மீட்டர் நடந்து சென்ற பேரணி நடத்தினர்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றன.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு பேரணிகளை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக டார்ஜிலிங்கில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 4 கிலோ மீட்டர் நடந்து சென்ற பேரணி நடத்தினர். இதில் மாநில அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளூர் மக்கள் பங்கேற்றனர்.