பாகிஸ்தான் மட்டுமல்ல, அமெரிக்கா கூட மதச்சார்பு நாடுதான், ஆனால் இந்தியா மட்டும்தான் அனைத்து மதங்களையும் சமமாகப் பாவிக்கும், மதிப்பளிக்கும் நாடாகும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்
புதுடெல்லியில் தேசிய மாணவர் படையின் குடியரசு தின விழா முகாமுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்றிருந்தார். அப்போது அவர் பேசுகையில், " மதங்களுக்கு இடையே நாம் எப்போதும் பாகுபாடு பார்க்க மாட்டோம், வேறுபாட்டுடன் நடத்தமாட்டோம் என்று நாம் கூறுகிறோம். அதை ஏன் நாம் செய்ய வேண்டும். நம்முடைய அண்டை நாடு தங்கள் அரசுக்கு மதம் உள்ளது என்று அறிவித்துள்ளது. தங்களை மதச்சார்புள்ள நாடு என்று பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால் நாம் அவ்வாறு பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லையே
அமெரிக்கா கூட மதச்சார்புள்ள நாடுதான். ஆனால்,இந்தியா ஒருபோதும் மதச்சார்புள்ள நாடு அல்ல. ஏனென்று கேட்டால், நம்முடைய சாதுக்கள், துறவிகள் அனைவரும், நமது நாட்டு எல்லைக்குள் வாழ்பவர்கள் மட்டும் நமது நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கவில்லை. ஆனால், உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றே அழைக்கிறார்கள்.
இந்தியா ஒருபோதும் தங்களின் மதம் இந்து, சீக்கிய மதம், பவுத்த மதம் என்று ஒருபோதும் பிரகடனப்படுத்தாது. இந்த நாட்டில் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். உலகமே ஒரு குடும்பம் எனப்படும் வாசுதேவ குடும்பத்தை முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். உலகம் முழுமைக்கும் இங்கிருந்துதான் இந்த செய்தி பரப்பப்பட்டது
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்