சோட்டா ராஜன்- கோப்புப் படம் 
இந்தியா

சோட்டா ராஜன் மீது மேலும் 4 வழக்குகள்: விசாரணையை தொடங்கியது சிபிஐ

செய்திப்பிரிவு

சோட்டா ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது மேலும் 4 புதிய வழக்குகளை பதிவு செய்து சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.

மும்பையில் நடந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவரும், நிழல் உலக தாதாவான சோட்டா ராஜன் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தபோது இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். இந்தியா கொண்டு வரப்பட்ட சோட்டா ராஜன், டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மீதான வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில் சோட்டா ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சிபிஐ மேலும் 4 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது. பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பை போலீஸார் அளித்த தகவலின் பேரில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT