இந்தியா

டெல்லி ஜேஎன்யு சர்வர் அறை சூறையாடப்படவில்லை: ஆர்டிஐ மனுவுக்கு பதில்

செய்திப்பிரிவு

டெல்லியில் தங்களது பல்கலைக்கழக அலுவலக சர்வர் அறை சூறையாடப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் அளித்த பதிலில் ஜேஎன்யு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் இருதரப்பு மாணவர்களுக்கு இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. தங்களது அலுவலகத்தின் சர்வர் அறை, கண்காணிப்பு கேமராக்களை முகமூடி அணிந்த மாணவர்கள் கடந்த ஜனவரி 3-ம் தேதி அடித்து நொறுக்கியதாக பல்கலைக்கழகம் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக போலீஸிலும் புகார் அளித்தது. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ‘மக்களின் தகவல் உரிமைகளுக்கான தேசிய விழிப்புணர்வு‘ என்ற அமைப்பின் உறுப்பினர் சவுரவ் தாஸ் என்பவர் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் மனு அனுப்பியிருந்தார்.

இந்த ஆர்டிஐ மனுவுக்கு ஏற்கெனவே கூறிய புகாருக்கு முரணாக ஜேஎன்யு பல்கலைக்கழகம் பதிலளித்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த பதிலில், ‘‘எங்கள் அலுவலகத்தின் சர்வர் அறை சூறையாடப்படவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்படவில்லை. மின் விநியோகம் இல்லாததால் பல்கலைக்கழக சர்வர் ஜனவரி 3-ம் தேதி செயலிழந்தது. கண்காணிப்பு கேமராக்களில் தொடர்ச்சியாக காட்சிகள் பதிவாகவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT