இந்தியா

நரேந்திர மோடிக்கு தொழில்துறையினர் வாழ்த்து

செய்திப்பிரிவு

இந்தியாவின் 15-வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடிக்கு இந்திய தொழில்துறையினர் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள். நம்பிக் கையை ஏற்படுத்தி இந்திய பொரு ளாதாரத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற தங்களது எதிர்பார்ப்பினையும் தெரிவித்திருக்கிறார்கள்.

புதிய அமைச்சரவைக் குழு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்படும் போது சிறப்பான அரசாங்கத்தை நடத்த முடியும் என்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைமை இயக்குநர் சந்திரஜித் பானர்ஜீ தெரிவித்தார்.

பிக்கி தலைவர் சித்தார்த் பிர்லா கூறும் போது நம்பிக்கை ஏற்படுத்தும் அரசாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தவர், தொழில் முனைவோர்கள், நிறுவனங்கள், இளைஞர்கள் ஆகியோர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.

வியாபாரத்துக்கு தேவையான நம்பிக்கையை ஏற்படுத்துதல், வேலை வாய்ப்புகளை உருவாக்கு தல், உணவு பணவீக்கத்தை குறைத்தல் மற்றும் சுகாதாரத்தை அதிகபடுத்துதல் ஆகியவை அரசாங் கத்தின் முக்கியமான கடமையாக இருக்க வேண்டும் என்றார்.

புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து கள், அரசுக்கு மஹிந்திரா குழுமம் தோள் கொடுக்கும் என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த மஹிந்திரா டிவிட்டர் சமூக வளைதளத்தில் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தா அசோசேன் அமைப்பின் தலைவர் ரானா கபூர் 10 சதவீத வளர்ச்சிக்கு இந்தியாவை எடுத்து செல்ல வேண்டும் என்றார்.

மேலும் அமைச்சரவைகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை குறைத்து முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT